புதிய வகுப்பறை கட்டிட பணி

கூட்டப்பள்ளியில் 32 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது

Update: 2023-12-29 08:48 GMT

பள்ளிகட்டிடம் திறப்பு

திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில், நகராட்சி நடு நிலை பள்ளிக்கு ₹32லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி கல்வி நிதியில் இருந்து 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டும் பணியை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். திமுக தலைமை செயற் குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணை தலைவர் கார்த்திகேயன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு. பொறியாளர் சரவணன், நகரமன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி, மல்லிகா, சண்முகவடிவு, சம்பூர்ணம், செல்லம்மாள், முருகே சன். புவனேஸ்வரி உலக நாதன், மனோன்மணி, திவ்யா. ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News