கடையநல்லூரில் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணி:சேர்மன் ஆய்வு

கடையநல்லூரில் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணியை சேர்மன் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-12 08:57 GMT
சேர்மன் ஆய்வு செய்தார் 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் எல்இடி மின் விளக்கு அமைக்கும் பணியினை கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சுகந்தி, மின் கோட்ட உதவி மின் பொறியாளர் நகர்ப்புறம் 2 சின்னத்துரை, கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் மற்றும் எலக்ட்ரீசியன் ஹாஜா. 5வது வார்டு செயலாளர் சையது மசூது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News