6 லட்சம் மதிபீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடக்கம்
மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது
Update: 2023-12-09 08:14 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காமாண்டப்பட்டியில் சுமார் 200குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் ஒருசில பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீர் குழாய் அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாவட்ட கவுன்சிலர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் இன்று அப்பகுதியில் மாவட்ட கவுன்சிலர் சண்முகம் நிதியில் இருந்து 6லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கவுன்சிலர் சம்பு என்கின்ற சண்முகம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.