விஷம் அருந்தி கட்டிடத் தொழிலாளி பலி
புதுக்கோட்டை மாவட்டம், வீரப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-03-17 11:01 GMT
அன்னவாசல் அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டம், வீரப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேர்ந்தவர் கருப்பையா (வயது-50) கட்டிட கம்பி கட்டும் மேஸ்திரியான இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வயிற்று வலியால் அவதியடைந்து வந்த கருப்பையா கடம்பராயன்பட்டி பிரிவு சாலை அருகே விஷம் குடித்து மயங்கியுள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா உயிரிழந்தார்.