அரசு பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலி - ஓட்டுனர் கைது
Update: 2023-11-27 03:34 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி காவல்துறை வாகன சோதனை சாவடி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டையில் இருந்து குமுளி சென்ற அரசு பேருந்தை தேனியை சேர்ந்த ஓட்டுனர் ராமச்சந்திரன் ஒட்டி வந்துள்ளார். அப்பொழுது அதிவேகமாக சென்ற அரசு பேருந்து எதிரே வந்த ராஜபாளையம், செட்டிகுளம், ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராம்குமாரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ராம்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பேருந்தை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த ஓட்டுநர் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.