திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா குறித்து அனைத்து அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்.;
Update: 2024-03-21 10:22 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா குறித்து அனைத்து அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 1433 ஆம் பசலி பங்குனி திருவிழா நடைபெறுவதை ஒட்டி பாதுகாப்பு ஆலோசனை தொடர்பாக திருக்கோவில் வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் அனைத்து அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் சுரேஷ் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி மற்றும் மண்டலம் ஐந்தின் தலைவர் சுவேதா விமல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி முருகன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் தீயணைப்பு துறை அலுவலர்கள் வட்டார சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் திருக்கோவிலில் நடைபெறும் கை பாரா நிகழ்ச்சி, சூரசம்ஹார நிகழ்ச்சி, திருக்கல்யாணம், திருத்தேர் போன்றவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.