திருப்பூரில் வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் வணிகர் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி.

Update: 2024-03-29 09:38 GMT
வணிகர் சங்ககளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்ககங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜ பேட்டி. வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு வரும் ஐந்தாம் தேதி மதுரையில் நடக்கிறது இதனை ஒட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா மாவட்டம் வாரியாக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இது விடுதலை முழக்க மாநாடாக  நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தற்போது திருப்பூரில் வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசிஉள்ளேன்.  ஆன்லைன், கார்பரேட் கம்பெனிகளால் எங்களுக்கு அதிக இடர்பாடு, அதுமட்டுமின்றி ஜி எஸ் டி, குப்பை வரி உயர்வு உள்ளிட்டவைகளால் நாங்கள் பாதிக்கபட்டுள்ளோம். கார்பரேட் கம்பெனி, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.தேர்தல் ஆணையத்திடம் எங்கள் இடர்பாடுகளை தெரிவித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகலாள் வணிகர்கள், வியாரிகள், பொதுமக்கள் பணம் மட்டுமே பறிக்கபடுகிறது. அரசியல் கட்சி பணம் பாதுக்கப்படுகிறது. கடைசி இரண்டு தினங்களில் மட்டும் பறக்கும் படை அதிகாரிகள் செயல்படாமல் இருப்பார்கள். இந்த நிலை மாற வேண்டும். வரும் செவ்வாய் கிழமை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது மனு கொடுக்க உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மளிகை கடைகள் அடைத்து போராட்டம் நடத்தட்படும் என்றார்.
Tags:    

Similar News