கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
சாத்தூர் அருகே புதிய கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்கபப்ட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகிலுள்ள எட்டக்காபட்டியில் புதிய கல் குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வட்டாட்சியர் முத்து பாண்டீஸ்வரி மற்றும் மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்துக்கு கேட்டு கூட்டத்திற்கு எதிர்க்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி ரெட்டியபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இப்பகுதியில் அமைக்கப்பட உள்ள கல்குவாரி குறித்த திட்ட அறிக்கை வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் டிஜிட்டல் முறையில் செய்து காண்பிக்கப்பட்டது மேலும் இந்த கல் குவாரி அமைக்கப்படுவது சாதக பாதகங்கள் குறிக்கும் கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டது. கருத்து கேட்டு கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இப்பகுதியில் கல்குவாரி வருவதன் மூலம் குறைந்த விலையில் கல் ஜல்லிகள் மற்றும் எம்சாண்ட் ஆகியவை கிடைக்கும் என்றும் இதனால் பகுதி மக்களுக்கு நன்மையே என்றும் தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக வேண்டும் மஞ்சப்பை மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.