திருப்பூரில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் அனைத்து கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-28 14:01 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருப்பூரில் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 நடைபெறுவதை முன்னிட்டு 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி (பொதுபார்வையாளர்)ஹிமான்சுகுப்தா தலைமையில் (செலவின பார்வையாளர்) அசோக் குமார், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடன் மாநகராட்சி ஆணையர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், திருப்பூர் சார் ஆட்சியர் செளம்யா ஆனந்த்,உதவி ஆட்சியர் (பயிற்சி)கிருத்திகாவிஜயன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் தேர்தல் ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.