அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம்கலை மற்றும் இளம் அறிவியல் பாட மாணாக்கர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

Update: 2024-06-10 01:54 GMT

பைல் படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம்கலை மற்றும் இளம் அறிவியல் பாட மாணாக்கர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம்கலை மற்றும் இளம் அறிவியல் பாட மாணாக்கர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன், 10, முதல் நடைபெறவுள்ளது.

இந்த தகவல் கல்லூரி வலைத்தளம், ஈ.மெயில், மொபைல் போன், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் வழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணாக்கர்கள் மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் ஆகிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் காலை 09:30 மணிக்கு கல்லூரிக்கு வரவேண்டும். பி.ஏ. ஆங்கிலம், தமிழ், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. இயற்பியல், பி.எஸ்.சி. வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News