பென்னாகரத்தில் தேசிய கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-02 02:22 GMT
தேசிய ஜனநாயக கூட்டணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர் சௌமியா அன்புமணி மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றார் இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தினந்தோறும் அவருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ஜனநாயக கூட்டணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பாமக கௌரவ தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய கூட்டணி இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பாமக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை வெற்றி செய்ய வீடு வீடாக சென்று பாமக பொதுமக்களுக்காக களம் கண்ட நிகழ்வுகளையும்,மத்திய அரசு பொது மக்களுக்கு செய்து நலத்திட்ட உதவிகளையும் எடுத்துரைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News