பாரூர் பெரிய ஏரியில் பங்கு மீன் பிரிப்பதில் வாக்குவாதம்

பாரூர் பெரிய ஏரியில் பங்கு மீன் பிடிப்பதில் முதல் மனைவியின் வாரிசுகளை விட்டுவிட்டு இரண்டாவது மனைவிக்கு உரிமம் வழங்கியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-11 08:55 GMT

விசாரணை நடத்தும் போலீசார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் இவருக்கு மணி என்ற செல்வி என்ற மனைவி இருந்த நிலையில் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு பத்மா, ஆனந்தி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் சிதம்பரம் இரண்டாவதாக சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதில் இரண்டாவது மனைவிக்கு வேணி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது இந்நிலையில் சிதம்பரம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமான நிலையில் முதல் மனைவியின் வாரிசுகளுக்கும் இரண்டாவது மனைவி மற்றும் அவரது வாரிசுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இதில் முதல் மனைவியின் வாரிசுகளை விட்டுவிட்டு இரண்டாவது மனைவி சந்திரா மட்டும் அவரது நிலம் மற்றும் பாரூர் பெரிய ஏரியில் பங்கு மீன் பிடி உரிமத்தை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆக்கிரமடைந்த முதல் மனைவியின் வாரிசுகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் என பல இடங்களில் மனு அளித்து உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் முதல் மனைவியின் வாரிசுகளின் மனுவினை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் மீன் வள அதிகாரிகள் இரண்டாவது மனைவிக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து முதல் மனைவியின் வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு தற்பொழுது விசாரணை நடந்து வருவதாகவும் இந்நிலையில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ரத்தினம் அவர்கள் முதல் மனைவியின் வாரிசுகளுக்கு எதிராக இரண்டாவது மனைவியின் பெயரில் பாரூர் பெரிய ஏரியில் பங்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்கியதாக தெரிகிறது.

உரிமத்தின் பேரில் இன்று காலை பாரூர் பெரிய ஏரியில் மீன் பிடிக்க வந்த சந்திராவை முதல் மனைவியின் வாரிசுகளான பத்மா மற்றும் ஆனந்தி ஆகியோர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த பாரூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் மீன்பிடிக்காமல் இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இவரது முதல் மனைவியின் வாரிசுகள் கூறுகையில் எங்களுக்கு பங்கு மீன் பிடிப்பதில் உரிமம் வழங்காமல் இரண்டாவது மனைவிக்கு மட்டும் வழங்கியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அதிகாரியில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை விட்டுவிட்டு அந்த உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் பாரூர் ஏரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News