தண்டனைக் கைதி தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை .
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-29 06:10 GMT
கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யபட்ட தண்டனை மற்றும் விசாரனை கைதிகள் 2000க்கு மேற்பட்டோர் உள்ளனர்.சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தையை கொண்டு அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு பணிகள் வழங்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறைச்சாலை சார்பில் பெட்ரோல் பங்குகள் நடத்தபடுகிறது.இங்கு ஏராளமான நன்னடத்தை கைதிகள் ஷிப்ட் முறையில் போலீசார் கண்காணிப்பில் பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங் இயங்கி வரும் நிலையில் பங்கில் பணியாற்றி வந்த தண்டனைக் கைதி இன்று காலை தப்பி ஓடியுள்ளார்.இன்று காலை ஷிப்ட் மாற்ற சிறை காவலர்கள் பணியில் உள்ளவர்கள் எண்ணிக்கையை சோதனை செய்து பார்த்தபோது கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் இருந்து வந்த தண்டனை சிறைவாசி விஜய் ரத்தினம் என்பவர் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து உடன் பணியாற்றியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.காலை 5.30 மணிக்கு மேல் அவரை பார்க்கவில்லை என சக கைதிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.