மாமியார் வீட்டை சேதப்படுத்திய காவலர் கைது
அரூர் அருகே கணவன் மனைவி தகராறில் மாமியார் வீட்டை அடித்து நொறுக்கிய அசாம் ரைபிள் படை பிரிவு காவலர். அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.;
Update: 2024-04-24 05:40 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் கோலம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் அசாமில் ரைபில் படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரூர் அருகே பாப்பநாயக்கன் வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து செந்தில்குமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் மாமியாரிடம் நேற்று தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருடைய மாமியார் வளர்மதி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக் கப்பட்டார்.