அரசியல் கட்சி பிரமுகர்களை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வருபவர் செந்தில் முருகன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் மாநகராட்சியில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இங்கு பணி தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த வாரம் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இவரை அலுவலகத்தில் சந்திக்க முயன்ற போது முறையாக அணுகவில்லை எனக் கூறி அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
இந்நிலையில் அதிமுகவினர் தங்களது கட்சி தலைவியை அவதூறாக பேசியதாக அதற்கான விளக்கங்கள் கேட்டபோது இரு தரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி ஆணையரை பணி செய்ய விடாமல் அரசியல் கட்சியினர் முயன்று வருவதாகவும் , அதிகாரி என்றும் பார்க்காமல் அவதூறாக பேசுவதை கண்டித்து மாநகராட்சி அனைத்து பிரிவு ஊழியர்களும் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு அலுவலர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் அவதூறாக பேசி வருவதை வன்மையாக கண்டிப்பதாக கோஷங்கள் எழுப்பி பத்து நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, போராட்டம் செய்ய நான் கூறவில்லை. அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் இதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக பிரமுகரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது காஞ்சிபுரத்தில் பரபரப்பு இணையத்தில் உலா வருகிறது. அதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அவர் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் பதில் கூற முயன்றதை மாமன்ற உறுப்பினர்கள் கேட்காமல் வெளியே நடப்பு செய்தது, அதை எடுத்து ஆணையர் உட்பட அரசு அலுவலர்களின் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பரபரப்பும் காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.