மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம்

மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.;

Update: 2024-06-24 14:05 GMT

மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


மதுரை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த படிப்பில் சிறந்த மாணவ , மாணவிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்ல "வானில் சிறகடிப்போம்" என்ற பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் இன்று அதிகாலை விமான மூலம் சென்னைக்கு மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் 10 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மேயர் இந்திராணிபொன் வசந்த் , மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரிகள், மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் சிவசங்கர், செயலாளர் லெனின் குமார், பொருளாளர் சந்திரசேகரன், முன்னாள் தலைவர் மதன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டியன், உதவி ஆளுநர் கௌசல்யா மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர். இவர்கள் சென்னை சென்று காலை 11 முதல் 12 மணி வரை சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர். மதிய உணவுக்கு பின் மெரினா பீச் மற்றும் முக்கிய இடங்களை பார்வையிட்டு மீண்டும் இரவு பஸ் மூலம் மதுரை திரும்புகின்றனர்.

Tags:    

Similar News