திண்டுக்கல்லில் மாநகராட்சிகள் 72 சதவீதம் வரி வசூல்
பொதுமக்கள் விரைவாக வரி செலுத்த வசதியாக 17.02.2024 முதல் 29.02.2024 வரை அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என அனைத்து நாட்களிலும் வரிவசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 13:39 GMT
திண்டுக்கல் மாநகராட்சிகள் 72 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் 2023-2024 நடப்பு நிதி ஆண்டிற்கான செலுத்தப்பட வேண்டிய வரி, வரையற்ற இனங்கள் பொதுமக்கள் விரைவாக செலுத்த வசதியாக 17.02.2024 முதல் 29.02.2024 வரை அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கணினி வரிவசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 72 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரி வசூல் பாக்கியால் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மாநகராட்சியில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு திணற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.