திருத்தணி : பிப்.,8ல் பா.ஜ. பாதயாத்திரை
திருத்தணியில் நடக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் 12000 பேரை திரட்டுவது என திருத்தணியில் நடந்த பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Update: 2024-02-05 08:56 GMT
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில், தமிழகம் முழுதும் பாதயாத்திரையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக வரும் 8ம் தேதி திருத்தணி சட்டசபை தொகுதியில் பாதயாத்திரை தொடங்குகிறார். இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., தலைவர் அஸ்வின் தலைமையில் நேற்று திருத்தணியில் செயற்குழு கூட்டம் நடந்தது. திருத்தணி நகர தலைவர் சூரி வரவேற்றார். இதில் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, பாதயாத்திரை வரும் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என, தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றியத்தில், 2,000 பேர் வீதம் திருத்தணி சட்டசபை தொகுதியில் உள்ள, ஆறு ஒன்றியங்களில் இருந்து 12,000 பேரை திரட்டி வர வேண்டும் என, மாவட்ட தலைவர் அஸ்வின் அறிவுறுத்தினார். கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.