பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7309க்கு ஏலம் போனது.

Update: 2024-06-29 06:49 GMT

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7309க்கு ஏலம் போனது.


பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7309க்கு ஏலம் போனது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இம்மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1000 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர்.

இதில் கும்பகோணம், செம்பினார் கோவில், பண்ரூட்டி, விழுப்புரம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, தேனி, பண்ருட்டி பகுதிகளைச் சார்ந்த 13 வணிகர்கள் கலந்து கொண்டனர். இம்மறைமுக ஏலத்தில் 147 மெ.டன் அளவு பருத்தி வரத்து வரப்பெற்றது. அதிகப்பட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309/- என்ற வீதத்திலும் குறைந்தபட்சமாக குவாண்டால் ஒன்றிற்கு ரூ. 6289/- மற்றும் சராசரியாக ரூ. 6811/- என்ற வீதத்திலும் விற்பனை செய்யப்பட்டத.

பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 1 கோடி ஆகும். இம்மறைமுக ஏலமானது விற்பனைக்கூட கண்காணிப்பாளர் .இரா.தாட்சாயினி தலைமையில், மேற்பார்வையாளர் ப.கோ.சிவானந்த் முன்னிலையில் நடைபெற்றது... மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.7500/- என்ற அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்பட்டது மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது

Tags:    

Similar News