ரூ.7 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-01-25 07:27 GMT

பருத்தி 

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 320மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி.,ரகம் ரூ.6560 முதல் ரூ.7370வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3999 முதல் ரூ.5219வரையிலும் என மொத்தம் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வருகிற 31ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News