மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2024-02-07 11:34 GMT

பைல் படம்


மல்லசமுத்திரத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது. இதுகுறித்து, மேலாளர் கணேசன் தெரிவித்ததாவது; திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 500 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு ரூ.6830 முதல் ரூ.7463 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3890 முதல் ரூ.5289 வரையிலும் என மொத்தம் ரூ.11லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 14ல் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News