அவிநாசியில் ரூ.2.3/4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்!

அவிநாசியில் ரூ. 2-3/4 லட்சத்திற்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது.

Update: 2024-05-23 10:52 GMT

பருத்தி ஏலம்

 அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு 138 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர். சி. எச. ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 6500 முதல் ரூ. 7869 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 2000 முதல் ரூ. 3500 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.ஏலத்தின் மதிப்பு ரூ. 2,70,000 ஆகும். கனமழை காரணமாக பருத்தி வரத்து குறைவாக இருந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News