ரூ.5 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி வர்த்தகத்தில் ரூ.5லட்சத்திற்கு ஏலம் நடந்தது.;
Update: 2024-05-09 01:45 GMT
மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி வர்த்தகத்தில் ரூ.5லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 201 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு ரூ.7360 முதல் ரூ.8190 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3750 முதல் ரூ.4900 வரையிலும் என மொத்தம் ரூ.5லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 15ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.