கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏ.,விடம் கவுன்சிலர் மனு
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் அளவீடுமாற்றி அமைக்கப்படும் சுற்றுசுவரை மாற்றியமைக்க வேண்டும் என மல்லசமுத்திரம் 10வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தார்.;
Update: 2024-02-28 11:17 GMT
எம்.எல்.ஏ ஈஸ்வரன்
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் தற்சமயம் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றது. இப்பணிக்காக, அரசு அளவீடு செய்த இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் தனிநபருக்கு ஆதரவாக சுற்றுசுவர் அமைத்து வருகின்றனர். இதுகுறித்து, கடந்த வாரம் அ.தி.மு.க.,கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லசமுத்திரம் 10வது வார்டு கவுன்சிலர் லட்சுமிரவி நேற்று, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரனிடம் கோரிக்கைமனு அளித்தனர்.