பாபநாசத்தில் அச்சக உரிமையாளர்களுக்கு அறிவுரை கூட்டம்

மக்களவை தேர்தலையொட்டி பாபநாசத்தில் திருமண மண்ட உரிமையாளர்கள் ,அடகு கடை , வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்,அச்சக உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க மேலாளர்களுக்கான அறிவுரை கூட்டம் நடந்தது.

Update: 2024-03-19 08:19 GMT

அறிவுரை கூட்டம் 

பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட திருமண மண்ட உரிமையாளர்கள் ,அடகு மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர் உரிமையாளர்கள் ,அச்சக உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க மேலாளருக்கு அறிவுரை கூட்டம் .மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரும் உதவி தேர்தல் நடத்த அலுவலருமான முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலை வைத்தார். இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை வழிமுறைகள் முழுவீச்சில் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டது அதிக தொகை தொகையிலான பணப்பட்டுவாடா ஆகும்பட்சத்தில் வங்கி அதிகாரிகளும் அதேபோல் உணவகம் அல்லது விடுதியில் சந்தேகத்திற்கு இடமான வெளிநபர்கள் தங்குவதற்கு அனுமதிக்க கூடாது எனவும் கல்யாண மண்டபத்தில் அனுமதி இல்லா கட்சி கூட்டமோ அதை ஒட்டி எந்த நிகழ்வுகளும் அனுமதிக்க கூடாது எனவும் அதனை மீறும் பட்சத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது நகைக்கடை உரிமையாளர்கள் தினசரி நகை அடகு விவரங்கள் வட்ட அலுவலகங்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News