நீதிபதி முன் கோவில் உண்டியல் எண்ணும் பணி - பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-11-28 03:35 GMT

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவிலில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தினுள் அன்னதான உண்டியல் உட்பட 9 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் உண்டியலில் காசு, பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணியின் போது வெளி மாவட்ட செயல் அலுவலர் ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மூலம் உண்டியல் பணத்தை எண்ணுகின்றனர். இதனை கோவில் நிர்வாகத்திற்கு வேண்டப்பட்ட நபர் மூலம் கேமராவில் பதிவு செய்கின்றனர். உண்டியலில் செலுத்தப்படும் தங்க நகை உள்ளிட்டவற்ற மோசடி செய்யும்போது கேமராவை அணைத்து விடுவது, வேறு பக்கம் திருப்ப சொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் செயல்அலுவலர் வில்வமூர்த்தி கோவில் உண்டியல் நகையை திருடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை நீதிபதி முன்பு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News