பணம் பறிப்பு வழக்கில் கைதானவரை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
Update: 2023-12-07 08:21 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். தொழில் அதிபரான அவரிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் கூடுதலாக ரூ.15 லட்சம் தருவதாக சேலத்தை சேர்ந்த ஒரு கும்பல் தெரிவித்தது. ரூ.50 லட்சத்துடன் வந்த வெங்கடேசை ஒரு கும்பல் போலீஸ் உடையில் வழிமறித்து பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன், எடப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சீனிவாசனை காவலில் எடுத்த விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசனை ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.