தொட்டியில் தவறி விழுந்து மாடு பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு
வேலூர் முத்து மண்டபம் அருகே தொட்டியில் தவறி விழுந்த மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பத்திரமாக மீட்டனர்.
Update: 2024-04-22 14:59 GMT
வேலூர் முத்துமண்டபம் பாலாற்றங்கரையோரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.சுத்திகரிப்பு நிலையம் அருகே ஒரு மாடு நின்று கொண்டிருந்தது.அந்த மாட்டை நாய் ஒன்று விரட்டியது. நாய்க்கு பயந்து ஓடிய மாடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உள்ளே குழாய் வால்வுக்காக சிமெண்டால் கட்டப்பட்டு இருந்த தொட்டியில் தவறி விழுந்தது. அதில் இருந்து வெளியேற முடியாமல் மாடு தவித்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேர போராட்டத்துக்கு பின் மாட்டின் வயிற்றில் கயிறு கட்டி பொக்லைன் எந்திரம் மூலம் தொட்டியில் இருந்து மீட்டனர்.