காரைக்குடியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்குடியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-06-12 09:40 GMT

மாடு

காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காரைக்குடி நகராட்சி ரோடுகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. வளர்க்கப்படும் மாடுகள் வீட்டில் வைத்து பராமரிக்காமல் சாலையில் அவிழ்த்து விடப்படுகிறது. இதனால், மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரில் திரிவதோடு இரவு நேரங்களில் சாலைகளில் அமர்ந்து கொள்கிறது. சாலைகளில் மாடுகள் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள் தவிர மாடுகளும் காயமடைகிறது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் மாடு வளர்ப்போரின் எண்ணிக்கையும் மாடுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாடுகள் சாலையில் சுற்றி திரிவதை தடுத்து விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News