இபிஎஸ் எத்தனை முறை ராஜினாமா செய்ய வேண்டும் - முத்தரசன்

முதல்வர் முக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றால் இபிஎஸ் எத்தனை முறை ராஜினாமா செய்ய வேண்டும் சிபிஎம் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பினார்.

Update: 2024-06-24 12:15 GMT
முத்தரசன்

 மதுரை உத்தங்குடியில் தமிழ் மாநில விவசாயி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த.முத்தரசன் கூறுகையில் "இந்தியாவில் தலைசிறந்த மருத்துவர் உருவாக்க வேண்டும் என நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள், நீட் தேர்வுகள் வருவதற்கு முன்னதாகவே தலைசிறந்த மருத்துவர்கள் சேவை ஆற்றி வருகிறார்கள், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே நீட் தேர்வுகளின் முன்னதாகவே முடிவுகள் வெளியிடப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை, நீட் தேர்வு குளறுபடிக்கு ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து விட முடியாது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், நீட் தேர்வு தேவையில்லை எனும் கருத்து தமிழகத்தை கடந்து பல மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் அரசியல் செய்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பதவி விலக வேண்டும் என அறிக்கை விட வேண்டுமென அதிமுகவும் பாஜகவும், நினைக்கிறது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனி்சாமி ராஜினாமா செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்திருக்கும்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள், மதுவிலக்கு பிரிவில் உள்ள காவல்துறை கருப்பு ஆடுகள் சாராய வியாபாரிகளிடம் இருந்து வாரம்தோறும் பணத்தை பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறார்கள்" என குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News