தஞ்சாவூரில் சிபிஎம் - இந்தியா கூட்டணி போராட்டம்
மாநில அரசுகளின் உரிமை பறிப்பைக் கண்டித்து தஞ்சாவூரில் சிபிஎம் - கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்பாட்டாம் நடந்தது.
ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளை பறிப்பதை கண்டித்தும், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசின் அதிகாரத்தில் அத்துமீறி தலையிடுவதைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய கண்டன இயக்கம் நடைபெற்றது.
இதையொட்டி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தஞ்சை மாநகராட்சி மேயரும், திமுக மாநகரச் செயலாளருமான சண்.ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஆர்.ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன், மனிதநேய மக்கள் கட்சி முகமது உசேன், கும்பகோணம் துணை மேயர் சுப.தமிழழகன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.வி.கண்ணன், ஆர். கலைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூர், வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.