நியாய விலைக்கடைக்கு சொந்தக் கட்டடம் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நியாய விலைக்கடைக்கு சொந்தக் கட்டடம் கேட்டு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-19 15:39 GMT
சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வரகூர், அம்மையகரம் கிராமங்களுக்கு நியாய விலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், வரகூர், அம்மையகரம் கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடை தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  எனவே, நியாய விலைக் கடைக்கு நிரந்தரமாக சொந்தக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி வரகூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியக் குழு உறுப்பினர்  எம்.ராம் தலைமை வகித்தார். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மதியழகன், எம்.கதிரவன், கிளை செயலாளர்கள் அம்மையகரம் முருகானந்தம், வரகூர் எம்.சௌந்தர்ராஜன் மற்றும் கிளைத் தோழர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி,  நியாய விலைக் கடைக்கு, விரைவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் எனக் கூறியதோடு, இடத்தை அளவீடு செய்து சென்றனர்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் காரணமாக நியாய விலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட தற்போது வழி பிறந்துள்ளது.

Tags:    

Similar News