செங்குன்றத்தில் கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழா - சிபிஎம் மாநில செயலாளர் பங்கேற்பு

செங்குன்றத்தில் கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் பங்கேற்பு

Update: 2024-02-15 09:26 GMT

இல்ல திறப்பு விழா

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, நிர்வாகியின் இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்றும் ஆளுநர் மீது அவை உரிமை மீறல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆளுநர் பதவியை வைத்து ஆர்.எஸ்.எஸ் அடிமட்ட தொண்டராகவே செயல்பட்டு வருகிறார் என சாடினார். ஆளுநரைப் பயன்படுத்தி எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் போட்டி அரசாங்கத்தை நடத்தும் பாஜக அரசை கண்டிப்பதாக தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய ஜனநாயகத்தை பறிக்கும் செயலாக அமையும் என்றார். மேலும் மக்கள் தொகை அடிப்படையில் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்பு தெரிவித்த பாலகிருஷ்ணன் பாஜக காலூன்ற முடியாத தென் மாநிலங்களை பழிவாங்கும் நடவடிக்கையாக எம்பிக்களின் எண்ணிக்கையை குறைப்பதாகவும், முதலமைச்சர் கொண்டு வரவுள்ள 2 தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றார். நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியே விவசாயிகள் போராடி வருகின்றனர் என்றார். எம்.எஸ்.சாமிநாதன் கொள்கைகளை காலில் போட்டு மிதித்து விட்டு பாரத ரத்னா விருது கொடுப்பது, கண்ணை குருடாக்கி விட்டு சித்திரத்தை கொடுத்து என்ன பயன் என தெரிவித்தார். பூமிபூஜைக்கும், ராமர் பிரதிஷ்டைக்கும் அழைக்கப்படாததால் அதிருப்தியில் உள்ள அத்வானிக்கு ஆறுதல் பரிசாக பாரத ரத்னா கொடுக்கப்பட்டுள்ளது என விமர்சித்த பாலகிருஷ்ணன், பாஜக அரசு அரசியல் ஆதாயத்திற்காக பாரத ரத்னா விருதை கொச்சைப்படுத்துகிறது என்றார். ஜாமீன் கிடைக்கும் என காத்திருந்த நிலையில் தள்ளிப்போவதால் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது வரவேற்கதக்கது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் நாங்கள் கேட்டுள்ள தொகுதிகள் கிடைக்கும் என பாலகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Tags:    

Similar News