குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேறி உள்ளனர்.

Update: 2024-06-18 05:24 GMT

பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேறி உள்ளனர்.


சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 3 குற்றவியல் சட்டங்களில் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ள மாற்றங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும், தமிழக அரசு வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்தக் கோரியும் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் குற்றவியல் சட்டங்களில் ஏற்படுத்தி உள்ள மாற்றங்கள் குறித்து 10 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, வருகிற 28-ந்தேதி சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் பெண் உறுப்பினர்களுக்கு என தனியாக கட்டிடம் கட்டப்படும். சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் சரவணன், துணைச்செயலாளர்கள் ரத்தினவேல், ரத்தினம், ஜோதி, நூலகர் மணிவண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருநாவுக்கரசு, செயற்குழு உறுப்பினர்கள் சிராஜூதீன், கவிதா, சேலம் ஜனா, பாஸ்கர், இம்தியாஸ், கண்ணையன், சோழன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News