நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடுமையான பனி பொழிவு காரணமாக பயிர் பாதித்துள்ளது.

Update: 2024-01-28 08:38 GMT

பனியால் பாதித்துள்ள பயிர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பல்வேறு இயற்கை இடர்பாடுகளை கடந்து சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மார்கழி மாதம் முடிந்தும் கூட கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் சூழ்கட்டும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை இலை சுருட்டு புழு,குருத்து பூச்சி ஆகியன தாக்குவதோடு மட்டுமின்றி ஊடுபயிராக பயிரிட்டுள்ள உளுந்து பயிர்களின் பூக்களும் கொட்டி விடுவதால் மகசூல் பாதிக்கும் அபாயமும்‌ உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கீழ்வேளூர், பட்டமங்கலம்,தேவூர், வெண்மணி, கீரங்குடி, காருகுடி, தியாகராஜபுரம், சித்தாய்மூர், திருக்குவளை,எட்டுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்கள் அனைத்தும் பனி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.

மேலும் வழக்கத்தை விட அதிகமாக தை மாதம் பிறந்தும் பெய்யும் பணி பொழிவால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News