சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் உணவில் பல்லி

சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2024-02-03 02:06 GMT


சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் உ ணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


சேலம் ஏற்காடு ரோட்டில் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது.

இதனை அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி ஆகியோர் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சமையல் கூட வளாகத்தை சுத்தமாக பராமரிக்காததாலும், திறந்த வெளியில் சமையல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்லி கிடந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத காரணத்தினால் கல்லூரியில் உள்ள சமையல் கூடம் தற்காலிகமாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த குறைகளை நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் மறுஆய்வு செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News