கும்பகோணத்தில் வெள்ளரிப்பழம் விற்பனை மும்முரம்
கும்பகோணத்தில் வெள்ளரிப்பழம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
Update: 2024-04-24 10:50 GMT
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர், நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சி தரும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே வெள்ளரிப்பிஞ்சு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதை போல் கும்பகோணத்தில் வெள்ளரிப்பழம் விற்பனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. சாலையோர கடைகளில் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருவதால் அவற்றின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு வெள்ளரிப்பழம் ரூ.50 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணம் திருப்பனந்தாள் திருவிடைமருதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை செலவாகிறது. வெள்ளரியை முதலில் பிஞ்சுகாக சாகுபடி செய்வோம். வியாபாரிகள் பொதுமக்கள் சிலர் தங்களுக்கு வெள்ளரி பழமாக வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்காக பிஞ்சியை பலமாகும் வரை சாகுபடி நிலத்தில் விட்டு விடுவோம். வியாபாரிகளுக்கு உற்சாகப் போக இருக்கும் பழத்தினை நாங்கள் சாலையோரம் கடைகளில் விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.