வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று தேவையான படிவங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-10 08:04 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று தேவையான படிவங்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News