கடலூர்: மீனவர்கள், பொதுமக்கள் கடலுக்குச் செல்ல தடை
கடலில் சூறை காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள், பொதுமக்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.;
Update: 2024-05-05 01:35 GMT
கடல்
கடலூர் மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் கடலுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம் எனவும், கடலில் 45 முதல் 65 கி. மீ. வரை சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தடை, காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.