அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் வெட்டி அகற்றம் - போலீசில் புகார்;
Update: 2024-02-19 15:50 GMT
மரங்கள் வெட்டி அகற்றம்
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள திடல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்திற்க்கு சொந்தமான இடத்தில் மாமரம் ஒன்று காணப்பட்டது. அந்த மரத்தை எந்த ஒரு அனுமதியும் பெறாமல் ஒரு தனியார் ஒப்பந்த நிர்வாகம் முழுவதுமாக வெட்டியும், அருகில் நின்ற புளியமரத்தினுடைய கிளைகளையும் வெட்டியுள்ளது. இது தொடர்பாக அழகியபாண்டியபுரம் வருவாய் ஆய்வாளர் தோவாளை தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளார். தாசில்தார் கோலப்பன் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.