எஸ். ஆர். எம் கல்லூரியில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு
காட்டாங்குளத்தூர் எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் அருகே அமைத்துள்ள எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சைபர் பாதுகாப்பு துறை தலைவர் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முருகன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இனிய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார். குறிப்பாக நம் தேவை என்ன, நம் விருப்பம் எதைச் சார்ந்தது, நாம் அன்றாடம் எவற்றையெல்லாம் கவனிக்கிறோம் என்று தேடுபொறிகள் நம்மைப் பற்றிய தகவல்களை நமக்கே தெரியாமல் திரட்டி வைத்துள்ளன.
சொல்லப்போனால், அவை நம்மைப்பற்றி நம்மைவிட அதிகம் தெரிந்து வைத்துள்ளன. சில செயலிகள் நம்முடைய தகவல்களைத் திரட்டி, வர்த்தக ரீதியில் தேவைப்படுவோருக்கு வழங்கி பணம் ஈட்டுகின்றன. எனவே நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.. குடியிருப்புகளில், அலுவலகங்களில் அனைவரும் இணையத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக சுலபமான ஒரு கடவுச்சொல்லைப் (Password) பதிந்து வைத்திருப்பர். ஆனால், சிலர் இலவச இணையத்திற்காக (Wi-fi), கடவுச்சொல்லைக் கேட்டு பெறுவது இன்று வாடிக்கையாகி விட்டது.