சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடைப்பேரணி
திருவாரூரில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடைப்பேரணி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-16 16:16 GMT
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் நீடாமங்கலம் வாண்டையார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, நீடாமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி,
நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மூன்று பள்ளி மாணவ மாணவியர்கள் இணைந்து பெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் இணையவழி குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு நடை பேரணி இன்று நடைபெற்றது . இப்பேரணியை எஸ்பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.