சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை
Update: 2023-12-23 11:17 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைனில் லோன் தருவது, கமிஷனுக்கு சப்ஸ்க்ரைப் செய்வது உள்ளிட்ட மோசடிகளில் இந்தாண்டு மட்டும் 1420 பேர் சிக்கி உள்ளனர். மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களிடம் வடமாநில கும்பல்கள் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி குறுந்தகவல்களை அலைபேசி எண்களுக்கு அனுப்புகின்றனர். இதை உண்மை என நம்பும் இளைஞர்கள் குறுந்தகவல்களில் உள்ள விபரங்களை பின்தொடர்கின்றனர். அப்போது எதிர்திசையில் பேசும் மர்ம நபர்கள் இளைஞர்களிடம் உள்ள பணத்தை பறிப்பதற்காக போலி வாக்குறுதிகளை கொடுத்து பணத்தை ரூ.லட்சக்கணக்கில் பிடுங்குகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2023ல் 1420 புகார்கள் வந்துள்ளது என சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.