குமரியில் சூறைக்காற்று; மீன் பிடி தொழில் பாதிப்பு
குமரியில் சூறைக்காற்று வீசுவதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2023-12-19 05:04 GMT
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்துவருகிறது. மேலும் இன்று செவ்வாய்க்கிழமை வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று சற்று மழை குறைந்த நிலையில், குமரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் கட்டுமரங்கள் மற்றும் ஃபைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவற்றை ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில கட்டு மரங்கள் கடலுக்கு சென்றும், அவற்றில் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விசைப்படகுகள் வழக்கம் போல் மீன்பிடித்து கரைக்கு வந்தனர். அவற்றிலும் அதிகமான மீன்கள் கிடைக்கவில்லை என்று மீனவர்கள் கூறினார்கள்.