கள்ளக்குறிச்சி அருகே கொடி கம்பம் சேதம்- பாஜக ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-08 07:12 GMT
பாஜக ஆர்ப்பாட்டம்
விருகாவூரில் பா.ஜ., கொடி கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனங்கூர் கிராமத்தில் கொடியேற்றுவதற்காக நடப்பட்டிருந்த பா.ஜ., கொடி கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் கடந்த 5ம் தேதி இரவு சேதப்படுத்தினர். இதை கண்டித்தும், பா.ஜ., கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்யக்கோரியும் தியாகதுருகம் பா.ஜ., ஒன்றிய தலைவர் நாராயணன் (தெ) தலைமையில் அக்கட்சியினர் விருகாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.