கூடங்குளத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-23 07:41 GMT

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் பழுது ஏற்பட்ட நிலையில் முதலாவது அணு உலையில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அணுமின் நிலையம் சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News