அடிக்கடி விபத்துகள் நடக்கும் தண்டலம் கூட்டு சாலை

தண்டலம் கூட்டு சாலை அடிக்கடி விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது உள்ளது.;

Update: 2024-01-08 15:57 GMT

விபத்து நடக்கும் சாலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், பேரம்பாக்கம்- - தண்டலம் மாநில நெடுஞ்சாலையும் இணையும் தண்டலம் கூட்டு சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணி நடக்கிறது. விபத்தை தடுக்க ஸ்ரீபெரும்புதுார் அருகே மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், சந்தவேலுார் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இதேபோல தண்டலம்கூட்டு சாலையில், விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நான்கு ஆண்டுகளில் தண்டலம் சாலை சந்திப்பில் 25க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

இந்நிலையில், தண்டலம் கூட்டு சாலையில் போலீசார் பணியில் இருப்பதில்லை, தானியங்கி சிக்னலும் இயங்குவதில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த பகுதியை அச்சத்துடன் வாகன ஒட்டிகள் கடந்து செல்கின்றனர்.

இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.

Tags:    

Similar News