பழுதடைந்த சாலையால் விபத்து அபாயம் : வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ;

Update: 2024-06-27 10:37 GMT
பழுதடைந்த சாலையால் விபத்து அபாயம் : வாகன ஓட்டிகள் அவதி

பழுதடைந்த சாலை

  • whatsapp icon

தூத்துக்குடி மாநகராட்சி சங்கரப்பேரி ஜோதி நகரில் 80அடி பிரதான சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சீர் செய்யவில்லை.  இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி மேயர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News