உசிலம்பட்டி அருகே வடமாநில வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
உசிலம்பட்டி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
மீட்கப்பட்டுள்ள வாலிபரின் உடல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக எழுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த உடலை மீட்டு சோதனை செய்தபோது அவர் எழுமலையில் சில மாதங்களாக சர்க்கஸ் நடத்தி வரும் வடமாநில குழுவைச் சேர்ந்த வினோத்ரா மகன் தீபக் குமார் (19)என்பது தெரியவந்தது .
மேலும் அவரது கழுத்து, கை ,கால் ஆகிய பகுதிகளில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது.மேலும் கை,கால்கள் கட்டப்பட்டு கல்லுடன் கிணற்றில் கிடந்துள்ளார். போலீசார் வடமாநிலத்தைச் சேர்ந்த சர்க்கஸ் நடத்தி வரும் தொழிலாளியை யாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு கிணற்றுக்குள் போட்டுவிட்டு சென்றனரா அல்லது வேறேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.