பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Update: 2024-05-23 12:12 GMT
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி கமிஷனர் வே.சரவணன் ஆகியோர் மாலை அணிவித்தனர். அதைத்தொடர்ந்து திமுக சார்பில் அமைச்சர் கே. என். நேரு சார்பில் முத்தரையர் சிலைக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. அமைச்சருடன் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன் மாணிக்கம் ,பழனியாண்டி , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் கருப்பையா, அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், முத்துச்செல்வம் காஜாமலை விஜி, முத்துக்குமார் கருணாநிதி ,மோகன்தாஸ் ,நாகராஜ் கமல் முஸ்தபா, கதிர்வேல் , ராம்குமார், செவந்தி லிங்கம்,சிங்காரம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல அனைத்துக்கட்சிகள் சார்பிலும் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.